மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதியுடன் தொழிற்கல்வி மற்றும் அடிப்படைக்கல்வி கற்பிக்கப்படுகிறது.
இந்த இல்லத்தில் வருடா வருடம் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும். கடந்த வருடம் கொரோனா காரணமாக நவராத்திரி விழாவை சிறப்பாக நடத்த இயலவில்லை. இந்த வருடம் மீண்டும் வழக்கம் போல நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
வழக்கமாக இங்குள்ள அரங்கில் சாமி சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவர். இதில் மாணவர்களின் பஜனையும் இருக்கும். பின்னர் மாணவர்கள் அம்பாள் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்வர். கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெறும். பின்னர் பிரசாதம் வழங்கப்படும்.இந்த வருடம் சில கட்டுப்பாடுகளால் ஊர்வலம் நடத்தப்படவில்லை.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…