என்சிசியின் ராணுவ பிரிவு லேடி சிவசாமி ஐயர் பெண்கள் பள்ளியில் தொடங்கப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள லேடி சிவசாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கேடட் கார்ப்ஸ் – ராணுவப் பிரிவு நவம்பர் 16 அன்று பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டது.

என்.சி.சி கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. சிறப்பு விருந்தினராக சப். சுரேஷ் குமார் – JCO, 1(TN) CTC NCC அவர்கள் கலந்து கொண்டார்.

பள்ளியில் குழுவினரால் பிரார்த்தனை பாடல் மற்றும் என்சிசி கொடி பாடல் பாடப்பட்டது. பள்ளி மாணவியர் கே.ஹரிணி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர் தனது சிறப்புரையில், மாணவர்களின் இளம் மனங்களில் தன்னம்பிக்கை, தைரியம், ஒழுக்கம், வெற்றி மனப்பான்மை ஆகியவற்றை வளர்ப்பதே என்சிசியின் நோக்கமாகும் என்றார்.

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் டாக்டர் வத்சலா நாராயணசாமி – செயலாளர் (NBGES) மற்றும் வி.எஸ். சுப்பிரமணியன் – செயலாளர் (சர் சிவசாமி கலாலயா மேல்நிலைப்பள்ளி ) ஆகியோரும் பேசினர்.

தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமையாசிரியரும் சுருக்கமாகப் பேசினார்.

மாணவி எம்.அக்ஷயா நன்றியுரையாற்றினார்.

Verified by ExactMetrics