ஆர்.ஏ.புரத்தில் உள்ள குடியிருப்பு வாரியத்தின் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் முறையாக திறந்தாலும் குடியிருப்புகளை ஒப்படைக்க தாமதம் ஏற்படுவதால் குடியிருப்புவாசிகள் கோபத்தில் உள்ளனர்.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள வல்லீஸ்வரன் தோட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு, 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களுடைய அடுக்குமாடி குடியிருப்புகளைப் பெறுவதற்காக ஒதுக்கீடு மற்றும் பணம் செலுத்தப்பட்ட போதிலும் இன்னும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

அவர்களுக்கு 2021ல் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

மின் வினியோகத்திற்கான மீட்டர்கள் இன்னும் அமைக்கப்பட உள்ளதாகவும், சில சிறிய ‘டச்-அப்’ வேலைகள் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதலமைச்சர் சமீபத்தில் இந்த குடியிருப்புகளை அடையாளமாக திறந்தபிறகு, இந்தத் துறைக்கான மாநில அமைச்சர் டி.எம்.அன்பரசன், மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு மற்றும் உள்ளூர் திமுகவினருடன் இணைந்து, சிலரிடம் சாவியை அடையாளமாக வழங்கும் விழாவை சமீபத்தில் தொடங்கினர்.

“கொரோனா தொற்றுநோய் தாமதத்தை ஏற்படுத்தியது, ஆனால் கடந்த ஆண்டு எங்களுக்கு குடியிருப்புகள் கிடைத்திருக்க வேண்டும். நாங்கள் வெளியில் தற்போது தங்கியிருக்கும் வீட்டிற்கு கொடுக்கும் வாடகை பணத்தை யார் கொடுப்பார்கள்?”, என்று இங்கு வசித்து வந்த மக்கள் குமுறுகின்றனர்.

2019 டிசம்பரில் சுமார் 570 குடும்பங்கள் இந்த வளாகத்திலிருந்து வெளியேறியது, இங்கு மூன்று பிளாக்குகளில் 630 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

இங்கு வசிக்கும் உரிமையுள்ள அனைவருக்கும் சமீபத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் அனைவரும் விதிகளை பூர்த்தி செய்யும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், அவ்வாறு சமர்ப்பித்தவர்களுக்கு மட்டுமே குடியிருப்பின் சாவி வழங்கப்படுகிறது.

Verified by ExactMetrics