சென்னை மாநகராட்சி மக்களுக்கு தடுப்பூசி போட நிறைய கிளினிக்குகள் நடத்தி வருகிறது. அந்த வகையில் ஆழ்வார்பேட்டையிலுள்ள கிளினிக்கில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி போட வரும் மக்களுக்கு குழப்பங்கள் ஏற்படும் வகையில் சில பிரச்சனைகள் இருந்தது. இங்கு மக்கள் கூட்டம் எப்போதும் அதிகரித்து காணப்பட்டது. தற்போது இங்கு இரண்டாவது சுற்று தடுப்பூசி போட வருபவர்களின் விவரங்களையும் அவர்களுக்கு செலுத்திய தடுப்பூசி பற்றிய விவரங்களையும் சேகரிக்கின்றனர். பின்னர் வேறொரு குறிப்பிட்ட நாளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொலைபேசி பேசி மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இங்கு கூச்சல் குழப்பம் தவிர்க்கப்படுகிறது. இந்த நடைமுறை ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் மட்டுமே பின்பற்றப்படுகிறது. இது மக்களுக்கு மிகவும் எளிமையாக உள்ளது.
மயிலாப்பூர் அனைவரையும் ஈர்க்கிறது; அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயத்தின் பங்குனித் திருவிழாக் காலத்தில், ஆலய வளாகமும்…
மயிலாப்பூர் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான தா. வேலுவை, 2026 சட்டமன்றத் தேர்தல்களுக்கான தனது வேட்பாளராக திமுக தேர்வு செய்துள்ளது.…
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களில், மயிலாப்பூர் தொகுதியிலிருந்து போட்டியிடுவதற்கான தமிழக வெற்றி கழக கட்சியின் வேட்பாளராக, கட்சியின் பொருளாளர் பி.…
மயிலாப்பூரில் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் தேரோட்ட நிகழ்வுகளை வரைவதற்காக, 'சென்னை வீக்கெண்ட் ஆர்ட்டிஸ்ட்ஸ்' (CWA) குழுவின் உறுப்பினர்கள் மாட வீதிகளின்…
இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் – ஸ்ரீ மகாவீர் சேவா சங்கம், ஆர்.ஏ.புரம். மார்ச் 29.…
மந்தைவெளிப்பாக்கம், கால்வாய் கரைச் சாலையில் சென்னை மாநகராட்சியால் (GCC) நடத்தப்படும் சென்னை தொடக்கப்பள்ளியின் மாணவர்கள், தங்கள் வகுப்பறைகளில் ஓர் அறிவியல்…