ஆழ்வார்பேட்டை ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி போட புதிய எளிய நடைமுறைகள்

சென்னை மாநகராட்சி மக்களுக்கு தடுப்பூசி போட நிறைய கிளினிக்குகள் நடத்தி வருகிறது. அந்த வகையில் ஆழ்வார்பேட்டையிலுள்ள கிளினிக்கில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி போட வரும் மக்களுக்கு குழப்பங்கள் ஏற்படும் வகையில் சில பிரச்சனைகள் இருந்தது. இங்கு மக்கள் கூட்டம் எப்போதும் அதிகரித்து காணப்பட்டது. தற்போது இங்கு இரண்டாவது சுற்று தடுப்பூசி போட வருபவர்களின் விவரங்களையும் அவர்களுக்கு செலுத்திய தடுப்பூசி பற்றிய விவரங்களையும் சேகரிக்கின்றனர். பின்னர் வேறொரு குறிப்பிட்ட நாளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொலைபேசி பேசி மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இங்கு கூச்சல் குழப்பம் தவிர்க்கப்படுகிறது. இந்த நடைமுறை ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் மட்டுமே பின்பற்றப்படுகிறது. இது மக்களுக்கு மிகவும் எளிமையாக உள்ளது.

Verified by ExactMetrics