பதினெட்டு வயது நிரம்பிய அனைவரும் மே 1ம் தேதி முதல் தடுப்பூசி போட அனுமதி

மே 1ம் தேதி முதல் பதினெட்டு வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டுள்ள வலைதளத்திற்கு http://www.cowin.gov.in சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும். ஏப்ரல் 28ம் தேதி முதல் பொதுமக்கள் பதிவு செய்து கொள்ளலாம். பின்பு அவர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும். அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு குறிப்பிட்ட நாட்களிலில் மட்டுமே சுகாதார மையத்திற்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.