ஆர்ட்டிஸ்ட் எம். லட்சுமணன் கடந்த மூன்று ஆண்டுகளாக சீனிவாசபுரத்தில் உள்ள அவரது வீட்டு சுவற்றில் புத்தாண்டுச் செய்தியாக பொருத்தமானதாக உணர்ந்ததை ஓவியமாக தீட்டி வருகிறார்.
கடந்த வாரம் திடீரென மழை பெய்த போதிலும், இந்த கலைஞர் தனது வேலையில் மூன்று நாட்கள் முழுவதுமாக செலவிட்டார்.
தனது புத்தாண்டு சம்பந்தமான ஓவியத்தை வரைவதற்கு, கடந்த ஆண்டில் நாட்டில் ஆதிக்கம் செலுத்திய சில கருப்பொருள்களை நான் தேர்ந்தெடுத்தேன், என்று கூறுகிறார். எனவே சென்னை பெருமழை, ஜெனரல் பிபின் ராவத்தின் மரணம், மாநிலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம், கொரோனா வைரஸைக் கையாள்வது, போன்றவற்றை கருப்பொருளாக கொண்டு தனது சுவற்றில் சொந்த செலவில் ஓவியம் தீட்டியுள்ளதாக கூறுகிறார்.
லட்சுமணன் கூறுகையில், கடந்த இரண்டு வருடங்களாக வேலையைப் பொறுத்த வரையில் தனக்கு கடினமான நேரமாக இருந்தது என்று கூறுகிறார். குறிப்பாக சுவர்களில் ஓவியங்கள் தீட்டுவது மற்றும் பெரிய சைன் போர்டுகளை உருவாக்குவது போன்ற வேலைகள் மிகவும் குறைவாகவே கிடைத்ததாக கூறுகிறார்.
இவர் தனியாகவும் வேலை செய்கிறார். மேலும் படுக்கையறைகள் அல்லது கடைகளின் சுவர்களில் வெள்ளை அடித்தல் மற்றும் படுக்கையறைகள் மற்றும் சுவர்களில் ஓவியங்கள் தீட்டுதல் உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார். வேலைகள் பெறுவதை பொறுத்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்துகிறார்.
ஓவியர் லட்சுமணின் சேவைகள் தேவைப்பட்டால், 8939651280 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.