மயிலாப்பூரில் உள்ள மாதவ பெருமாள் கோவில் குளத்தில் மழை நீர் தேங்கி நிற்காததால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியூரிலிருந்து களிமண் கொண்டு வந்து குளத்தின் அடிப்பகுதியில் நிரப்பினர். இவ்வாறு செய்தால் மழை நீர் குளத்தில் தேங்கி நிற்கும் என்கிற நோக்கில் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். இப்போது இந்த வாரம் பெய்த மழையினால் தற்போது சுமார் ஒரு அடி அளவுக்கு மழை நீர் சேமிக்கப்பட்டுள்ளது.
மேலும் குளத்திற்கு அருகிலுள்ள தெருக்களில் குழாய் பதித்து அதிலிருந்து வரும் மழை நீரையும் குளத்தில் சேர்த்துள்ளனர். இதன் மூலமும் தண்ணீர் கூடுதலாக குளத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் அதிகமாக குளத்திற்கு வந்தால் மார்ச் மாதத்தில் சில வருடங்களாக நடைபெறாமல் இருந்த தெப்பம் திருவிழா சிறப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…