நாட்டான் தோட்டத்தில் குடிசை மாற்று வாரிய கட்டடத்தில் பாழடைந்த குடியிருப்பு இடிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார்.

மயிலாப்பூர், நாட்டான் தோட்டத்தில் குடிசை மாற்று வாரியத்தின் பாழடைந்த அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளம் படிக்கட்டு வியாழக்கிழமை இரவு இடிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார்.

குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை பார்வையிட்டனர்.

நாட்டன் தோட்டம் என்பது பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டிய (அதன் கிழக்குப் பகுதியில்) திருவள்ளுவர் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு காலனி ஆகும்.

1970களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட நான்கு பிளாக்குகளில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வந்ததாக இங்கு வசிப்பவர்கள் கூறுகின்றனர். காலனியை மீண்டும் புதுப்பிப்பதற்க்காக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடனான இறுதி ஒப்பந்தத்திற்க்கு பின்னர் பெரும்பாலானவர்கள் இந்த ஆண்டு வெளியேறினர்.

ஆனால் சுமார் 40 குடும்பங்கள் பாழடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ந்து தங்கி ஆபத்தை எதிர்கொண்டனர். வியாழன் இரவு நடந்த சம்பவம் இது போன்ற முதல் சம்பவம் என்று கூறப்படுகிறது. இப்போது, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் குடியிருப்பாளர்களை வெளியே செல்ல வற்புறுத்துகிறார்கள்.

இங்கு வசிக்கும் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் மார்ச் 30-ம் தேதி குடிசை மாற்று வாரியத்தின் ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என்று உள்ளூர் வளாக சமூக சங்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன், ஆர்.நடராஜ் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், கொரோனா தொற்றுநோய் காரணமாக, அவை கிடப்பில் போடப்பட்டன.

Verified by ExactMetrics