கடலோரத்தில் உள்ள மசூதியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பெருநாள் தொழுகை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் உள்ள மசூதியில் 500க்கும் மேற்பட்டோர் ரம்ஜான் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.

பெயின்டிங் காண்டிராக்டரும் மசூதியின் கவுன்சில் உறுப்பினருமான ஷபீர் அகமது கூறுகையில், ஈத் போன்ற சமயங்களில் இந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள முஸ்லிம்கள் இங்கு வந்து தொழுகைகளில் கலந்துகொள்வார்கள் என்றும் நோன்பு மற்றும் பிரார்த்தனையின் ரம்ஜான் காலம் முழுவதும், மக்கள் மாலை வேளையில் நடைபெறும் பிரார்த்தனையில் கலந்துகொண்டு அன்றைய நோன்பை முடித்த பிறகு நோன்பு கஞ்சி வழங்கப்படும் என்றும் அவர் கூறுகிறார்.

விரைவில் மசூதி அதன் 50 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஒரு சிறப்பு நிகழ்வை நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

இந்த மசூதியில் அஷ்ரப் அலி அவர்கள் சபையின் தலைவராக உள்ளார்.

 

Verified by ExactMetrics