தமிழக கோவில் சுவரோவியங்களை கருப்பொருளாக கொண்ட ஓவியங்கள். சி.பி ஆர்ட் சென்டரில் கண்காட்சி.

கலைஞர், கண்காணிப்பாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரான கீதா ஹட்சன், ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் சி.பி. ஆர்ட் சென்டர், எண்.1ல் உள்ள சகுந்தலா ஆர்ட் கேலரியில் ‘Murals Revisited’ என்ற கருப்பொருளில் தனது ஓவியங்களை காட்சிப்படுத்துகிறார்.

ஜனவரி 19 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு கண்காட்சியை, கோரமண்டல் பெர்டிலைசர்ஸ் தலைவர் ஏ.வெள்ளையன், முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் மற்றும் அறங்காவலர் சி.பி.ராமசுவாமி ஐயர் அறக்கட்டளை தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சி நடைபெறும் தேதிகள் – ஜனவரி 19 – 31 / நேரங்கள் – காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை. தொலைபேசி எண் – 98412 66149

Verified by ExactMetrics