பங்குனி திருவிழா 2024: கொடியேற்றத்தைக் காண திரண்ட பக்தர்கள்

கபாலீஸ்வரர் கோவிலின் வருடாந்திர பங்குனி உத்திரம் திருவிழாவிற்கான தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்ற நிகழ்வை காண, சனிக்கிழமை காலை (மார்ச் 16) கோயிலுக்குள் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர்.

விடியும் முன்னரே சடங்குகள் தொடங்கிவிட்டன, அதற்குள், தினசரி நிகழ்வுகளை காண விரும்பும் பக்தர்கள் இங்கு கூடினர்.

காலை 7 மணியளவில் கொடியேற்றம், பெருவிழாவின் தொடக்கத்தை உணர்த்தியது.

இந்த நிகழ்வின் வீடியோவைப் பார்க்கவும் – https://www.youtube.com/watch?v=sQyaVberQPU

சில மயிலாப்பூர்வாசிகள் தங்கள் திருவிழா அனுபவங்களை நினைவுகூரும் வீடியோ தொடரையும் கீழே உள்ள இணைப்பில் சென்று பார்க்கவும் – https://www.youtube.com/watch?v=HpX8bu3-diA

Verified by ExactMetrics