பங்குனி திருவிழா 2024: அழகான கோலங்களை போட்ட பெண்கள். காய்கறிகள் மூலம் ரங்கோலிகளை வடிவமைத்த வியாபாரிகள்.

பங்குனி திருவிழாவானது ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு தினமும் காலை மற்றும் மாலை இரண்டு முறையாவது உயிர் கொடுக்கிறது. நாளின் ஒவ்வொரு பகுதியும் கோயிலின் உள்ளேயும் அதைச் சுற்றியும் வெவ்வேறு காட்சிகளை பார்க்கமுடிகிறது.

மார்ச் 18 அன்று மாலை மாட வீதியில் சுவாமி புறப்பாட்டில் ஒரு பகுதியாக வெள்ளி பூத, பூதகி மற்றும் தரகாசுர வாகனங்களின் ஊர்வலத்தைக் காண முடிந்தது.

மாலை 6.30 மணி முதல் பெண் பக்தர்கள் முன்வந்து கிழக்கு கோபுரத்திலிருந்து சந்நிதி தெரு மற்றும் 16 கால் மண்டபம் வழியாக ஊர்வலம் செல்லும் பாதையை சுத்தம் செய்து பின்னர் கோலங்கள் மற்றும் வண்ணமயமான ரங்கோலிகளை வடிவமைத்தனர்.

மற்ற இடங்களில், தெற்கு மாட வீதியில் வியாபாரிகள் தங்கள் கடைகள் அருகே பலவிதமான காய்கறிகளைப் பயன்படுத்தி வண்ணமயமான காய்கறி ரங்கோலிகளை உருவாக்கினர்.

இந்த ஊர்வலத்தின் வீடியோவை இங்கே காணவும் – https://www.youtube.com/watch?v=UDav2JDmLdo

Verified by ExactMetrics