பங்குனி உற்சவம்: கோவிலில், திருவிழாவிற்காக அர்ச்சகர்களின் எண்ணிக்கை இரட்டிப்பு.

உற்சவம் தொடங்குவதை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் பரம்பரை அர்ச்சகர்களுடன் மாநிலம் முழுவதும் இருந்து 20 கூடுதல் அர்ச்சகர்கள் இணைந்துள்ளனர்.

இவர்களில் சில அர்ச்சகர்கள் பஞ்ச மூர்த்தி ஊர்வலத்துடன் செல்வர், இன்னும் சிலர், சுவாமி மற்றும் அம்பாளுக்கு அடுத்த ஊர்வலத்திற்கு அலங்கரிப்பார்கள்.

மூலவர் சந்நிதிகள் மற்றும் உற்சவ காலத்தில் தினமும் ஆறு கால பூஜைகளை நிர்வகிக்கும் அர்ச்சகர்களும் இருப்பார்கள்.

செய்தி: எஸ்.பிரபு

Verified by ExactMetrics