கோவில் குளங்களில் அமாவாசை சடங்குகள் செய்ய மக்களுக்கு அனுமதி

அமாவாசை தினமான இன்று திங்கட்கிழமை காலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்திற்குள் சென்று அமாவாசை தர்ப்பணம் செய்வதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் அமாவாசை நாளில், இறந்த குடும்ப உறுப்பினர்களுக்காக பிரார்த்தனை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

இந்த அமாவாசை, குளத்தின் கரையில் மக்கள் பூசாரிகளை வைத்து சடங்குகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் படிகளில் அனுமதிக்கப்படவில்லை.

மக்கள் கூட்டம் அலைமோதியதால், ஆர்கே மட சாலையில் ஏராளமானோர் அமர்ந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.