3A மற்றும் 23B வழித்தடங்களில் MTC பேருந்துகளை மீண்டும் இயக்க மக்கள் வேண்டுகோள்.

மயிலாப்பூரில் கடந்த வாரம் ஏற்கெனெவே மயிலாப்பூரிலிருந்து அடையாறு வழியாக தி.நகருக்கு இயங்கி வந்த எம்.டி.சி பேருந்து 5B சேவை, எம்.எல்.ஏ வின் தீவிர முயற்சியினால் மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்கப்பட்டது.

மக்கள் தற்போது அதே போன்று ஏற்கெனெவே இயங்கி வந்த இரண்டு வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகளை இயக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில் ஒன்று 3A வழித்தடம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளம் பகுதியிலிருந்து பிராட்வே வரை டாக்டர் ரங்காரோடு, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, மவுண்ட்ரோடு வழியாக இயக்க வேண்டும் என்றும், மேலும் இந்த வழியாக பேருந்து சேவையே தற்போது இல்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர். அதேபோன்று மற்றொரு வழித்தடமான 23B (மயிலாப்பூரிலிருந்து எழும்பூர் ரயில் நிலையம் வரை) பேருந்தையும் மக்கள் மீண்டும் இயக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வழித்தடமும் ஏற்கனெவே இயக்கப்பட்டு வந்த வழித்தடம்தான் என்று தெரிவிக்கின்றனர்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago