காய்ச்சல் பரிசோதனை முகாம்களில் பரிசோதனை செய்ய ஆர்வம் காட்டாத மக்கள்

மாநகராட்சி கடந்த ஆண்டை போல பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்துகின்றனர். இந்த முகாமில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உடனிருப்பர். தற்போது நடத்தப்பட்டு வரும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களில் மக்கள் அவ்வளவாக பங்கேற்பதில்லை என்று சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று நாம் வி.சி.கார்டன் தெருவில் நடைபெற்ற காய்ச்சல் முகாமை பார்வையிட்டோம் மந்தைவெளி அம்மா மினிகிளினிக்கில் பணியாற்றும் மருத்துவர் மற்றும் செவிலியர் இந்த முகாமில் இருந்தனர். இங்கு சுமார் இருப்பது முதல் முப்பது நபர்களே காய்ச்சல் பரிசோதனை செய்ய வந்திருந்தனர்.

செய்தி மற்றும் புகைப்படம் : ஐஸ்வர்யா.ஆர்