பொரி, தோரணங்கள், பூசணிக்காய் மற்றும் வாழை இலைகள்; ஆயுத பூஜைக்கு மாட வீதியில் விற்பனை

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலுக்கு அருகில் உள்ள தெற்கு மாட வீதியில், பூஜைக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்ய வியாபாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

ஆயுதபூஜைக்காக, இன்று செவ்வாய்க்கிழமை காலை விற்பனை தொடங்கியது.

வியாபாரிகள் குறிப்பிடும் சில விலைகள் இங்கே –

பொரி பொட்டலங்கள் 30 ரூபாயில் தொடங்குகிறது.
தோரணம் செட் – ரூ 50
பூசணிக்காய் – விலை 60 ரூபாய்.
வாழைமரம் செட் – ரூ 120 இல் ஆரம்பம்.