தபால் ஓட்டு போடுவது இப்போது மயிலாப்பூர் பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை குப்பம் பகுதிகளில் நடைபெறவுள்ளது. குப்பம் பகுதிகளில் வசிக்கும் சுகாதார ஊழியர்கள் ஏற்கெனவே விண்ணப்பம் 12D சமர்ப்பித்துள்ளனர். கலங்கரை விளக்கம் முதல் சீனிவாசபுரம் வரை சுமார் முப்பது மாற்றுத்திறனாளிகள் மற்றும் எண்பது வயதிற்கு மேற்பட்டோர் இருப்பதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தபால் ஓட்டளிப்பது சம்பந்தமாக இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் சுகாதார ஊழியர்களுக்கு மீட்டிங் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். நேற்று சாந்தோம் பகுதியில் தபால் ஓட்டு போடும் பணி தொடங்கி நடைபெற்றது. ஆனால் ஆர்.ஏ.புரம் பகுதியில் இதுவரை தபால் ஓட்டு போடும் பணி தொடங்கவில்லை என்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…