தேர்தல் 2021: குப்பம் பகுதிகளில் நாளை தபால் ஓட்டு போடும் பணி தொடக்கம்

தபால் ஓட்டு போடுவது இப்போது மயிலாப்பூர் பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை குப்பம் பகுதிகளில் நடைபெறவுள்ளது. குப்பம் பகுதிகளில் வசிக்கும் சுகாதார ஊழியர்கள் ஏற்கெனவே விண்ணப்பம் 12D சமர்ப்பித்துள்ளனர். கலங்கரை விளக்கம் முதல் சீனிவாசபுரம் வரை சுமார் முப்பது மாற்றுத்திறனாளிகள் மற்றும் எண்பது வயதிற்கு மேற்பட்டோர் இருப்பதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தபால் ஓட்டளிப்பது சம்பந்தமாக இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் சுகாதார ஊழியர்களுக்கு மீட்டிங் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். நேற்று சாந்தோம் பகுதியில் தபால் ஓட்டு போடும் பணி தொடங்கி நடைபெற்றது. ஆனால் ஆர்.ஏ.புரம் பகுதியில் இதுவரை தபால் ஓட்டு போடும் பணி தொடங்கவில்லை என்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Verified by ExactMetrics