சாந்தோம் பேராலயத்தின் இந்த வார தமிழ் பூசை நேர விவரங்கள்

இந்த வாரம் கிறிஸ்தவ மக்களுக்கு புனித வாரம். கிறிஸ்தவ மக்கள் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை புனித நாட்களாக கருதி (இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது மற்றும் உயிர்த்தெழுந்தது) அதற்கான பூசைகளை செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிகள் அனைத்து திருத்தலங்களிலும் நடைபெறும்.

இதையொட்டி சாந்தோம் பேராலயத்தில் ஆங்கில மற்றும் தமிழ் பூசைகள் நடைபெறவுள்ளது. தமிழ் பூசைகள் வியாழக்கிழமை ஏழு மணிக்கும் புனித வெள்ளி அன்று பூசை ஆறு மணிக்கும் சனிக்கிழமை இரவு பதினொரு மணிக்கும் நடைபெறும். அதே போல தமிழ் பூசை ஈஸ்டர் சண்டே அன்று எப்பொழுதும் நடக்கும் வழக்கமான நேரத்தில் நடைபெறும். பாவத்தை ஒப்புக்கொள்ளும் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை மற்றும் வியாழக்கிழமை காலையில் நடைபெறும்.

Verified by ExactMetrics