தேர்தல் 2021: அதிமுக, திமுக வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

மயிலாப்பூர் தொகுதியில் கடைசி வார தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் பிரச்சாரங்களை திட்டமிட்டு செய்து வருகின்றனர். திமுகவின் த.வேலுவும் மற்றும் அதிமுகவின் ஆர்.நடராஜும் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். நடராஜுக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்னவென்றால் அவர் பெயர் வேட்பாளராக கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டது. இவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போது நிறைய சமுதாய நிகழ்ச்சிகளில் (கச்சேரி, விளையாட்டு) கலந்து கொண்டுள்ளார். இதனால் இந்த பகுதிகளில் உள்ள மக்களின் ஆதரவு நடராஜுக்கு இருக்கும் என்று அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். நேற்று முதல்வர் பழனிசாமி மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் நட்ராஜுக்கு ஆதரவாக மயிலாப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதேபோல திமுக வேட்பாளர் த.வேலுவுக்கு உள்ளூர் பகுதியிலும் மற்றும் குப்பம் பகுதிகளிலும் மக்களின் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கின்றனர். அந்த பகுதிகளில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அழ்வார்பேட்டை, அபிராமபுரம், ஆர்.ஏ.புரம் போன்ற பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு த.வேலுவை பற்றியும் அவர் மயிலாப்பூர் பகுதிக்கு ஏற்கனெவே செய்த வேலைகள் பற்றியும் அவ்வளவாக தெரியவில்லை.

மயிலாப்பூர் பகுதியில் போட்டியிடும் இரு வேட்பாளர்களும் மயிலாப்பூர் பகுதிக்கு அருகிலேயே வசிப்பதால் (த. வேலு மயிலாப்பூரிலும், நடராஜ் பெசன்ட் நகரிலும் வசிப்பதால்) வெற்றி பெரும் வேட்பாளரை மக்கள் சுலபமாக நேரில் சந்தித்து தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.

இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களின் ஓட்டு வங்கிகளில் மிடில் வகுப்பு மக்கள் மற்றும் உயர்ந்த வகுப்பில் இருக்கும் மக்களின் வாக்குகளே மயிலாப்பூர் பகுதியில் வெற்றிவாய்ப்பை தீர்மானிக்கும் என்று நம்பப்படுகிறது.

Verified by ExactMetrics