கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவையொட்டி நடைபெறும் கச்சேரிகள் ரத்து.

பங்குனி பெருவிழா சிறப்பாக கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்று முடிந்தது. நேற்று கடைசியாக திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நாடடைபெற்றது. எப்பொழுதும் பங்குனி பெருவிழா முடிந்தவுடன் நவராத்திரி மண்டபத்தில் ஒரு வார கால அளவிற்கு தினமும் மாலையில் இசை மற்றும் நடன கச்சேரிகள் நடக்கும். ஆனால் இந்த வருடம் கொரோனா காரணமாக கச்சேரிகள் நடத்தப்படவில்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.