தேர்தல் 2021: சாந்தோம் பகுதியில் தபால் ஓட்டு சேகரிக்கும் பணி தொடங்கியது.

இன்று சாந்தோம் பகுதியில் தபால் ஓட்டு போடும் பணி தொடங்கியது. தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட இரு அதிகாரிகள் வாக்குப்பெட்டிகளுடன் பதிவு செய்யப்பட்ட வீடுகளுக்கு வந்து வாக்குகளை சேகரித்து செல்வர். நீங்கள் அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உங்களது வாக்கை வாக்குப்பெட்டியில் போட வேண்டும். 12D விண்ணப்பத்தை ஏற்கெனவே சமர்பித்தவர்கள் மட்டுமே தபால் ஓட்டு போட முடியும். தபால் ஓட்டை செலுத்தியவர்கள் திரும்ப ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவின் போது வாக்களிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை மறுநாள் குப்பம் பகுதியில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்று மயிலாப்பூரின் அனைத்து பகுதிகளிலும் பகுதி வாரியாக தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி நடைபெறும்.

Verified by ExactMetrics