சி.ஐ.டி காலனி அருகே புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள எரிவாயு நிலையத்திற்கு மக்கள் எதிர்ப்பு

டி.டி.கே சாலை மற்றும் சி.ஐ.டி காலனி ஆறாவது மெயின் ரோட்டின் சந்திப்பில் ஆட்டோக்களுக்கு கேஸ் நிரப்பும் ‘கோ கேஸ்’ என்ற புதிய எரிவாயு இணைப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அருகில் வீடுகள் அதிகம் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆட்டோக்களை தெருக்களின் ஓரமாக கேஸ் நிரப்ப நிறுத்துவதால் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இது பெரிய தொந்தரவாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் எவ்வாறு இந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்குகினர் என்று கேள்வி எழுப்புகின்றனர். இது சம்பந்தமாக மாநகராட்சிக்கு புகார் அனுப்ப இருப்பதாக தெரிவிக்கின்றனர்.