தேர்தல் 2021: இராணி மெய்யம்மை பள்ளியில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி

இராணி மெய்யம்மை பள்ளியில் இன்று மயிலாப்பூர் தாசில்தார் தலைமையில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றவிருக்கும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் சுமார் ஆயிரம் நபர்கள் கலந்து கொண்டனர். அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி முகாமும் அங்கு நடத்தப்பட்டது. வாக்குச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று ஏற்கனேவே அரசு அறிவுறுத்தியுள்ளது.

செய்தி மற்றும் புகைப்படம்: கவிதா பென்னி