கபாலீஸ்வரர் கோவிலில் எளிமையாக நடைபெற்ற அறுபத்து மூவர் விழா

கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் அறுபத்து மூவர் திருவிழா ஊர்வலம் நேற்று நடைபெற்றது. கொரோனா காரணமாக சில விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. வழக்கமாக பங்குனி திருவிழாவின்போது மயிலாப்பூரின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சாமிகள் ஊர்வலத்தில் வரும். ஆனால் இந்த வருடம் கோலவிழியம்மன் மட்டுமே ஊர்வலத்தில் கலந்து கொண்டது. ஊர்வலம் இரண்டு மணி நேரத்திற்குள்ளேயே அறுபத்து மூவர் ஊர்வலம் முடிந்தது. இந்த முறை தேர் திருவிழாவிற்கு வந்த கூட்டத்தை விட அறுபத்து மூவர் விழாவிற்கு குறைவான கூட்டமே வந்தது. இந்த முறை கடைகள் நடத்தவும் மற்றும் அன்னதானம் வழங்கவும் தடை செய்யப்பட்டது. மேலும் அவ்வப்போது மக்களுக்கு முகக்கவசங்கள் அணிய வற்புறுத்தப்பட்டது.