ஒரு வருடம் கழித்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பிரதோஷ விழா.

கடந்த ஆண்டு இதே நேரத்தில், பிரதோஷ மாலையில், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் பிரகாரத்தை சுற்றிவருவதற்கு கொரோனா 2வது அலையை தொடர்ந்து நெறிமுறையின் ஒரு பகுதியாக, பக்தர்கள் பிரதோஷ ஊர்வலத்தை தரிசனம் செய்ய உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

பிரதோஷ மூர்த்தி கோவில் உள்ளே வாசலை கடந்து செல்லும் போது, ​​கிழக்கு மற்றும் மேற்கு நுழைவாயில்களில் பக்தர்கள் நின்று தரிசனம் செய்ய முயன்றதாக மயிலாப்பூர் டைம்ஸில் செய்திகள்ஏற்கனெவே வெளியாகியுள்ளன.(https://www.mylaporetimes.com/2021/07/devotees-not-to-be-allowed-for-next-pradosham-at-sri-kapali-temple-safety-measure/). பக்தர்கள் நீண்ட நேரம் நின்று கோவிலுக்கு வெளியில் இருந்து ஓதுவாரின் பாராயணத்தை கேட்டனர்.

புதன்கிழமை (ஆகஸ்ட் 24, 2022) மாலை வாழ்க்கை நல்ல நாட்களுக்குத் திரும்பியதற்கான சாட்சி. சுமார் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நந்தி அபிேஷகத்தை தொடர்ந்து ஊர்வலத்தையும் தரிசனம் செய்தனர்.

ஊர்வலத்தின் மூன்று சுற்றுகளின் போது ஒவ்வொரு வேதங்களையும் வழங்கும் வெவ்வேறு குழுக்களுடன் வேத பாராயணமும் மற்றும் தேவாரம் பாடல்களை பாடும் குழுவும் இருந்தது.

அலங்கார மண்டபத்தின் முன் ஓதுவார் சத்குருநாதன் திருமந்திரம் முழங்க, பரம்பரை அர்ச்சகர் தீபாராதனை செய்தபோது ஏகமாக
பக்தர்களின் கூப்பிய கரங்கள் இருந்தது.

மூன்றாவது சுற்று ஊர்வலத்தில் மோகன் தாஸின் நாதஸ்வரத்திற்கு ஏற்ப ஸ்ரீபாதம் தங்கிகள் வொயாலி காட்சியை அளித்தனர்.

– செய்தி மற்றும் புகைப்படம் எஸ்.பிரபு

Verified by ExactMetrics