பங்குனி உற்சவத்திற்கான லக்னப் பத்திரிக்கை வாசிப்பதை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரரர் கோவிலில் ஏற்பாடுகள் மும்முரம்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் புதன்கிழமை மாலை லக்னப் பத்திரிக்கை வாசிப்பதை முன்னிட்டு, செவ்வாய்கிழமை மாலை தோரணங்கள் அமைக்கும் வேலையில் பணியாளர்கள் மும்முரமாக இருந்தனர்.

பங்குனி உற்சவத்தில் லக்ன பத்திரிக்கை வாசிக்கப்படும் நிகழ்வு ஒரு முக்கிய நிகழ்வாகும்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி: எஸ்.பிரபு.