ஸ்ரீ மாதவப் பெருமாள் கோவிலில் ராம நவமி பிரம்மோற்சவம்

ஸ்ரீ மாதவப் பெருமாள் கோயிலில் ராம நவமி உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. உற்சவத்தின் ஒவ்வொரு மாலையிலும், ராமாயணத்தின் ஒரு அத்தியாயம் தொடர்பான அலங்காரத்தில் ராமர் காட்சியளிப்பார். அடுத்த 9 நாட்களுக்கு மாலை 5 மணி முதல் மக்கள் ராமரின் வெவ்வேறு திருக்கோலங்களை தரிசனம் செய்யலாம்.

விஸ்வாமித்திர முனிவரின் யாகத்தை ராமர் காக்கும் அத்தியாயத்துடன் வெள்ளிக்கிழமை உற்சவம் தொடங்கியது.

ஏப்ரல் 2ம் தேதி, அதாவது உற்சவத்தின் இரண்டாம் நாள், ராமர் அஹல்யா சாப விமோசனத் திருக்கோலத்தில் காட்சியளித்தார். மற்ற திருக்கோலங்களில் சிவன் வில்லை ஒடித்தல் (ஞாயிறு மாலை), சீதா கல்யாணம் (ஏப்ரல் 4), குஹ படலம் (செவ்வாய்), பரத பதுகா அத்தியாயம் (ஏப். 6), சூர்ப்பனக அத்தியாயம் (ஏப். 7), மாரீச்சனை வதம் செய்தல் (வெள்ளிக்கிழமை)ஆகியவை அடங்கும். அடுத்த சனிக்கிழமை ராமர் பட்டாபிஷேகம் நடைபெறும்.

ராம நவமியையொட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 10) காலை ராமர் மூலவர் சிலைக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை, அனுமன் ராமர் கோயிலுக்குள் ஊர்வலமாக பிரகாரத்தைச் சுற்றி வருவார்.

செய்தி: எஸ்.பிரபு

Verified by ExactMetrics