ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட இரானடே நூலகம் மற்றும் ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹால்.

தென்னிந்திய தேசிய சங்கத்தால் (சினா) நிர்வகிக்கப்பட்டு வரும் ரானடே நூலகம் மற்றும் ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹால் ஆகியவற்றைக் கொண்ட கட்டிடம் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மாலை மயிலாப்பூர் டைம்ஸிடம் கோயில் வட்டாரங்கள், ரூ.76லட்சம் கோவிலுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தப்படாததைத் தொடர்ந்து கட்டிடம் சீல் வைக்கப்பட்டது என்று தெரிவித்தது. இந்த சொத்து கோவிலுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப வருடங்களில் இந்த நூலகத்திற்கு ஆதரவு குறைவாக இருந்தாலும், சாஸ்திரி ஹால் கிளாசிக்கல் மியூசிக் கச்சேரிகள் / லெக்-டெம்கள் மற்றும் கூட்டங்களுக்கு மிகவும் பிடித்த இடமாக உள்ளது.

இதற்கிடையில், மயிலாப்பூர் கிளப், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயில் அதிகாரிகளுடன் கலந்து பேச்சுவார்த்தை நடத்தி, இந்த மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மயிலாப்பூர் கிளப் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீல் வைக்கப்பட்டது.

ஜூன் 6-ம் தேதி அடுத்த விசாரணைக்கு முன்னதாக இரு தரப்பினரும் சுமுக தீர்வுக்கு வருமாறு அறிவுறுத்தி கிளப்பை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.

செய்தி : எஸ்.பிரபு

Verified by ExactMetrics