ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற ரத சப்தமி விழா

சூரிய பகவான் பிறந்தநாளான ரத சப்தமியையொட்டி, இன்று செவ்வாய்க்கிழமை காலை கபாலீஸ்வரர் சிறிய ரதத்தில் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

காலை 8 மணிக்கு மேல் கோயில் குளத்தின் மேற்குப் பகுதியில் சத்குருநாதன் ஓதுவார் வேதமந்திரங்கள் முழங்க, பரம்பரை அர்ச்சகர் இ.வெங்கடசுப்ரமணியன் சிவாச்சாரியார் தலைமையில் தீர்த்தவாரி நடைபெற்ற நிலையில், மற்றொரு பரம்பரை அர்ச்சகர் பாலாஜி சிவாச்சாரியார் தலைமையில் வீதி உலா நடைபெற்றது.

தீர்த்தவாரியைத் தொடர்ந்து வடக்கு மாட வீதி வழியாக கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்றார்.

செய்தி மற்றும் புகைப்படம் : எஸ்.பிரபு