மெரினாவில் தேசியத் தலைவர் K.காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

தேசியத் தலைவர் மற்றும் முன்னாள் மாநில முதல்வர் K.காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காலை, லைட் ஹவுஸ் அருகே மெரினா புல்வெளியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இவர் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி பிறந்தார்.

மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். இங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சிலைக்கு வடக்கே சில மீட்டர் தூரத்தில் சென்னை மெட்ரோ ரயில் பணி தொடங்கியுள்ளது. இங்குள்ள புல்வெளியில் உள்ள காந்தி சிலை புதிதாக அமையவுள்ள ரயில் நிலைய வேலைகளுக்கு ஏற்றார் போல் மாற்றப்படவுள்ளது.

Verified by ExactMetrics