குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றதால், மெரினா சாலையின் ஒரு பகுதி 4 மணி நேரம் மூடப்பட்டது.

மெரினாவில் உள்ள காமராஜர் சாலையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்புக்கான மூன்று ஒத்திகைகளில் முதல் ஒத்திகை இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

இந்திய இராணுவத்தின் மூன்று பிரிவுகளின் குழுக்கள், மாநில காவல்துறையின் சில பிரிவுகள் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றது.

கலைஞர்கள் அடங்கிய குழுக்கள் ஒத்திகையின் கடைசி நாளில், இணைவார்கள் என்று ஒரு மாநில அதிகாரி நமக்குத் தெரிவித்தார். குடியரசு தின அணிவகுப்பில் அங்கம் வகிக்கும் பள்ளி மாணவர் குழுக்கள் தொற்றுநோய் விதிமுறைகளால் இந்த ஆண்டு இடம் பெறுமா என்பது சந்தேகமே.

ஜனவரி 22 மற்றும் 24ல் மீண்டும் ஒத்திகை நடைபெறும்போது, பிரதான சாலையான சாந்தோம் கதீட்ரல் முதல் விவேகானந்தா இல்லம் வரையிலான பகுதியில் போக்குவரத்து காலை 6 மணி முதல் 10 மணி வரை மீண்டும் மூடப்படும்.

Verified by ExactMetrics