நகர்மன்ற தேர்தல் முடிவுகள்: இரண்டு தி.மு.க., ஒரு சி.பி.ஐ-எம்., வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு

நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடந்ததால், மதியம் 2 மணிக்கு, மயிலாப்பூர் மண்டலத்துக்கு உட்பட்ட மூன்று வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் யார் என்பது முறையாகத் தெரிந்தது.

121 வார்டுக்கு திமுகவின் மதிவாணன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக முதலில் செய்தி வந்தது.

விரைவில், தேனாம்பேட்டையைச் சேர்ந்த தி.மு.க.வின் ஷீபா வாசு வார்டு 122-ல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மதியம் 2 மணி அளவில் வார்டு 123 க்கு சி.பி.ஐ-எம் வேட்பாளர் சரஸ்வதி தேர்ந்தெடுக்கப்பட்டதாக செய்திகள் அறிவிக்கப்பட்டது.

மாலை 4 மணியளவில் வார்டு 124, 125, 126 மற்றும் 171ல் ஆகிய வார்டுகளில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் முன்னணியில் இருப்பது தெரிய வந்துள்ளது. (இந்த வார்டுகள் அடையாறு மண்டலத்திற்கு உட்பட்டது மற்றும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது)

Verified by ExactMetrics