கல்வி வளர்ச்சி நாளில் கே.காமராஜின் மகத்துவத்தை எடுத்துரைத்த பள்ளி மாணவர்கள்.

முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான கே.காமராஜின் பிறந்தநாளை முன்னிட்டு, சர்.சிவசுவாமி கலாலயா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஜூலை 15ஆம் தேதி கல்வி வளர்சி நாள் கொண்டாடினர்.

மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் சொற்பொழிவாற்றினர், பாட்டுகள் மற்றும் குறும்படங்கள் அரங்கேற்றப்பட்டனர். பாரதியார், விவேகானந்தர், அறிஞர் அண்ணா ஆகியோரின் சந்திப்பை மாணவர்கள் கற்பனை செய்து காமராஜர் சகாப்தத்தைப் பற்றி விவாதிக்கும் தலைப்பில் நாடகம் அமைந்தது என்கிறார் முதல்வர் ஜி.பாண்டியன்.