பள்ளி மாணவர்களின் மனநலம் குறித்த விழிப்புணர்வு பேரணி

உலக மனநல தினத்தை முன்னிட்டு அக்டோபர் 10-ம் தேதி மயிலாப்பூரில் மனநலம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த விழிப்புணர்வு நடைபயணம் நடத்தப்பட்டது.

இது MAP (Mental Health for Action by People) மற்றும் மயிலாப்பூரில் உள்ள சர் சிவஸ்வாமி கலாலயா சீனியர் செகண்டரி பள்ளியால் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சர் சிவசுவாமி கலாலயா சீனியர் செகண்டரி பள்ளி, சர் சிவசுவாமி கலாலயா மேல்நிலைப் பள்ளி, கோட்டூர்புரம் ஏ.எம்.எம். மெட்ரிக் பள்ளி, லேடி சிவஸ்வாமி ஐயர் பெண்கள் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆசிரியர்களுடன் சுமார் 150 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

சித்திரகுளத்தில் உள்ள காந்தி சிலையிலிருந்து துவங்கிய வாக்கத்தான், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் குளத்தை சுற்றி வந்தது. மனநலம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்தி சென்றனர்.

Verified by ExactMetrics