‘தமிழ்நாட்டின் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் இசையைப் போற்றுதல்’ என்ற தலைப்பில் குறுகியகால, ஆன்லைன் படிப்பு அறிமுகம்

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மியூசிக் மற்றும் பைன் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகம் ‘தமிழ்நாட்டின் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் இசையைப் போற்றுதல்’ என்ற தலைப்பில் புதிய பாடப்பிரிவை அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக அலுவலகம் தமிழ்நாடு இசைக் கல்லூரி அமைந்துள்ள ஆர்.ஏ.புரம் கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது.

இது ஆன்லைனில் நடத்தப்படும். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் 2 மணி நேரம்
காலம்: 3 மாதங்கள்.

இந்த பாடப்பிரிவின் இயக்குநராக புகழ்பெற்ற வில்லுப்பாட்டு இசைக் கலைஞர் பாரதி திருமகன், பழம்பெரும் கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்டணம்: ₹7500 + 200. படிப்பை முடிப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

விண்ணப்பம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சேர்க்கைக்கான இடங்கள் குறைந்த அளவே உள்ளது. விவரங்களுக்கு பார்வையிடவும்: www.tnjjmfau.in

Verified by ExactMetrics