ஞாயிற்றுக்கிழமைகளில் பிற மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையடுத்து, தமிழ்நாட்டிலும் இன்று மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையடுத்து மயிலாப்பூரில் சாலைகள் வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
விடியற்காலையில் இருந்து, செய்தித்தாள்கள், பால் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குபவர்கள் அல்லது அரசு அனுமதித்த பணியில் இருப்பவர்கள் தவிர வாகனங்கள் எதுவும் சாலைகளில் செல்லவில்லை.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இரவுகளைப் போலல்லாமல், மயிலாப்பூர் மண்டலம் முழுவதும் இன்று காலை எந்த போலீஸ் அவுட்போஸ்ட்களும் காணப்படவில்லை.
வியாபாரிகள் கூட தங்கள் வியாபாரத்தை நிறுத்தியதால், தெற்கு மாட வீதி, மந்தைவெளி தெரு போன்ற இடங்கள், பேய் மண்டலம் போல் இருந்தது. டி.டி.கே சாலை, டாக்டர். ஆர்.கே. சாலை மற்றும் ஆர்.கே. மட சாலைகளும் அமைதியாக காணப்பட்டது.
தனிநபர்கள் உள்ளூர் கோயில்களின் வாயில்கள் வரை நடந்து சென்று, பிரார்த்தனை செய்துவிட்டு அங்கிருந்து நகரந்தனர்.
ஞாயிற்றுக்கிழமைகளில் பிரார்த்தனைகள், சிறப்பு திருப்பலி என்று பிஸியாக இருக்கும் தேவாலய பகுதிகளில், சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் மிகவும் அமைதியாக இருந்தது, சில தேவாலயங்களில் சேவைகள் அனைத்தும் வெப்காஸ்ட் செய்யப்பட்டு விசுவாசிகள் வீட்டிலேயே இருக்க தேவாலய நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…