கிரீன்வேஸ் சாலை எம்.ஆர்.டி.எஸ் வளாகத்தில் இறந்த மனிதனின் எலும்புக்கூடு கண்டெடுப்பு

திங்கட்கிழமை ஆர்.ஏ.புரம், கிரீன்வேஸ் சாலையில் உள்ள எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையத்தின் அடித்தளத்தில் நீண்ட நாட்களுக்கு முன் இறந்த ஒருவரின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக போலீசார் விசாரிக்கின்றனர்.

இறந்த நபர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை, ஆனால் அவர் மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்பதற்கான அறிகுறிகள் இருக்கிறது. இந்த பகுதியில் வசிக்கும் சில உள்ளூர்வாசிகள், அந்த நபர் வேறு இடத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், பின்னர் உடல் வெறிச்சோடி காணப்படும் ரயில் நிலையத்தின் வளாகத்தில் போட்டிருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.