இரண்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக சிறப்பு பேருந்து வசதி: எம்.எல்.ஏ ஏற்பாடு

மயிலாப்பூர் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின்படி எம்.டி.சி நிர்வாகம் பள்ளி மாணவர்களுக்காக பெரும்பாக்கத்திலிருந்து மயிலாப்பூர் பகுதிக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்துள்ளது.

ஏற்கெனெவே மயிலாப்பூர் பகுதியில் வசித்து வந்த மக்கள் ஏழை மக்கள் பெரும்பாலோனோர் பெரும்பாக்கம் பகுதிக்கு குடிபெயர்ந்து விட்டதாகவும், ஆனால் அவர்களின் பிள்ளைகள் பெரும்பாலானோர் இன்னும் மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிப்பை தொடர்வதாகவும் அவர்களின் வசதிக்காக இந்த பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ தா.வேலு கூறுகிறார்.

இந்த பேருந்து சேவை பெரும்பாக்கத்திலிருந்து கோட்டூர்புரம் சென்னை மேல்நிலைப்பள்ளி வழியாக ஆழ்வார்பேட்டை சென்னை மேல்நிலைப்பள்ளிக்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Verified by ExactMetrics