வார இறுதி நாட்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும் சிறப்பு முகாம்.

உங்கள் வாக்காளர் அட்டையில் திருத்தங்கள் செய்வதற்கும், புதிய வாக்காளராக உங்கள் பெயரை அல்லது குடும்பத்தில் உள்ளவர்களின் பெயரை சேர்க்க உங்களுக்கு மற்றொரு வாய்ப்பு.

அனைத்து சென்னை மாநகராட்சி அலுவலகங்களிலும், மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள இ சேவை மையங்களிலும், இந்த பணிகளை செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டு தற்போது பணியாற்றி வருகிறது.

வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள்/புதிய பெயர் சேர்த்தல்களுக்கான படிவங்களை இங்கே சமர்ப்பிக்கலாம். நீங்கள் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும் மற்றும் சில ஆவணங்களின் நகல்களை அதனுடன் இணைக்க வேண்டும்.

இந்த முகாம் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே.

Verified by ExactMetrics