ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோற்சவம்: பிப்ரவரி 12ல் லக்ன பத்திரிக்கை நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி பிரம்மோற்சவத்தின் ஒவ்வொரு நாட்களின் சிறப்புகளை அறிவிக்கும் புனித லக்னப் பத்திரிக்கை நிகழ்வு பிப்ரவரி 12, 2022 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

சிறப்பு நிகழ்வுகள் வாகன ஊர்வலங்கள் ஒவ்வொன்றின் விவரங்களையும் கோவிலின் பரம்பரை அர்ச்சகர் வாசிப்பார். இந்த நிகழ்வு பங்குனி பிரம்மோற்சவத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துகிறது.

மாலை 5.30 மணிக்கு மகா அபிஷேகத்துடன் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, பரம்பரை அர்ச்சகர் லக்னப் பத்திரிக்கையை வாசிப்பார்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிப்ரவரி 12ம் தேதி சனிக்கிழமை மாலையில் கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் ஆகியோர் கோயிலுக்குள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவார்கள்.

பங்குனி திருவிழா நிகழ்வுகளுக்கு பொதுமக்கள் வழக்கமான நேரங்களை போல் வரலாம் என்று தெரிகிறது. தற்போது, கொரோனா தொற்றுநோய் நேர விதிகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் கோயில்களுக்குச் செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை.

செய்தி : எஸ்.பிரபு

Verified by ExactMetrics