ஸ்ரீ கேசவ பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா ஆரம்பம்.

மயிலாப்பூர் ஸ்ரீ கேசவ பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் தொடங்குவதைக் குறிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் கொடியேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கேசவ பெருமாள் திருமந்திர பாராயணத்துடன் பிரபந்தம் முழங்க தர்மாதி பீடத்தில் வீதி உலா அழைத்துச் செல்லப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு கருட சேவை நடைபெறுகிறது.

செய்தி, புகைப்படம்: எஸ் பிரபு

Verified by ExactMetrics