ஸ்ரீ மாதவ பெருமாள் கோயில்: பாலாலயம் பிப்ரவரி 10ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ மாதவ பெருமாள் கோயிலில் பாலாலயம் நிகழ்ச்சி பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் டைம்ஸ் கடந்த வாரம் இது சம்பந்தமாக செய்தி வெளியிட்டிருந்த நிலையில் தற்போது பிப்ரவரி 10ம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த புனித நிகழ்வு பிப்ரவரி 9 ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும் என்று கோயில் அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை மாலை மயிலாப்பூர் டைம்ஸிடம் தெரிவித்தார்.

பிப்ரவரி.8ம் தேதி மாலை நான்கு கால பூஜை துவங்கும், என்றார்.

பாலாலயம் நிகழ்ச்சிக்குப் பிறகு தொடங்கும் இக்கோயிலின் புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் டி.வி.எஸ்-ன் வேணு சீனிவாசனால் மேற்கொள்ளப்படும், இது முடிய மேலும் சில மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி: எஸ்.பிரபு

Verified by ExactMetrics