ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் விவேகானந்தர் நவராத்திரி விழா: பிப்ரவரி 6 முதல் 14 வரை.

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் பிப்ரவரி மாத தொடக்கத்தில், மயிலாப்பூர் வளாகத்தில் விவேகானந்தர் நவராத்திரி விழாவை கொண்டாடுகிறது.

வரலாற்று சிறப்புமிக்க சிகாகோ உரைக்குப் பிறகு (1893), சுவாமி விவேகானந்தர் இந்தியா திரும்பியதும், 1897 பிப்ரவரி 6 முதல் 14 வரை சென்னையிலுள்ள விவேகானந்தர் இல்லத்தில் தங்கியிருந்தார் என்று மடத்தின் குறிப்பு கூறுகிறது.

சுவாமி விவேகானந்தர் 9 நாட்கள் தங்கியிருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வானது ஒவ்வொரு ஆண்டும் ‘விவேகானந்த நவராத்திரி’யாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் தொடங்கப்பட்டு 125வது ஆண்டாகும்.

பிப்ரவரி 6 முதல் 14 வரை பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் – பஜனைகள், நாடகங்கள், பொம்மலாட்டம், கிளாசிக்கல் நடனங்கள் மற்றும் பிரபலங்களின் ஆன்மிக சொற்பொழிவுகள் அடங்கிய நிகழ்ச்சிகளுக்கு மடம் ஏற்பாடு செய்துள்ளது.

Verified by ExactMetrics