ஸ்ரீநிவாச பெருமாளின் கருட சேவை தரிசனம்

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் ஸ்ரீநிவாசப் பெருமாள் வைகாசி பிரமோற்சவத்தின் பகுதியாக வெள்ளிக்கிழமை காலை கருடசேவை தரிசனம் தந்தார்.

இங்கு பத்து நாள் வைகாசி பிரமோற்சவம் ஜூன் 1ம் தேதி தொடங்கியது.

ஜூன் 3ம் தேதி தங்க கருட வாகனம் ஊர்வலம், ஜூன் 6ம் தேதி யானை வாகனம் ஏசல், ஜூன் 8ம் தேதி இரவு 8 மணிக்கு குதிரை வாகன ஊர்வலம் ஆகியவை உற்சவத்தின் சிறப்பம்சங்களாகும்.

ஜூன் 7ஆம் தேதி காலை 7 மணிக்கு தேர் ஊர்வலம் தொடங்கும்.

தினமும் மாலை 6 மணிக்கு கோவில் வளாகத்திற்குள் பதி உலத்தல் நடைபெறும்.

 

 

 

 

 

செய்தி மற்றும் புகைப்படங்கள்: எஸ்.பிரபு