ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தான பிரம்மோற்சவம்: மே 22

வேதாந்த தேசிகர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் பத்து நாள் வைகாசி பிரம்மோற்சவம் வரும் திங்கட்கிழமை (மே 22) காலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து காலை 6.30 மணிக்கு வீதி உலா நடைபெறும்.

புதன்கிழமை காலை கருட சேவையும், ஞாயிற்றுக்கிழமை (மே 28) காலை தேர் ஊர்வலமும் நடைபெறும்.

சனிக்கிழமை (மே 27) மாலை ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு பிரசித்தி பெற்ற வொயாளி சேவையும், திங்கள்கிழமை (மே 29) மாலை குதிரை வாகனமும் சித்ரகுளம் மேற்குத் தெருவில் நடைபெறுகிறது.

செய்தி: எஸ்.பிரபு.

Verified by ExactMetrics