ஸ்ரீநிவாசப் பெருமாளின் வருடாந்திர சித்திரை பௌர்ணமி விழா: மே 5

ஆண்டுதோறும் சித்திரை பௌர்ணமி விழா வேதாந்த தேசிகர் கோயிலில் நடைபெறும்.

இந்த வருட சித்திரை பௌர்ணமி விழாவை முன்னிட்டு ஸ்ரீநிவாசப் பெருமாள் மயிலாப்பூர் வேதாந்த தேசிகர் கோயிலில் இருந்து வரும் வெள்ளிக்கிழமை (மே 5) நள்ளிரவுக்குப் பிறகு மாம்பலம் செல்கிறார். இந்த பயணம் 62வது ஆண்டாக நடத்தப்படுகிறது.

வெள்ளிக்கிழமை சரோஜினி தெருவில் உள்ள மண்டபத்தில் திருமஞ்சனம் நடைபெறும்.

செய்தி: எஸ்.பிரபு