கொரோனா தொற்று விதிமுறைகள் காரணமாக கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மூடல்

கொரோனா விதிமுறைகள் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை காலை கோவில்கள் மூடப்பட்டதால், கோவில் கோபுரத்தின் முன் பக்தர்கள் பிரார்த்தனை செய்து விட்டு வெளியேறினர்.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலிலும் மற்ற வழிபாட்டு தலங்களை போல வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசின் விதிமுறைகளுக்கு இணங்க கதவுகள் மூடப்பட்டிருக்கும்.

கோலவிழி அம்மன் கோவிலுக்கு சென்ற பெண்கள், மூடிய வாயிலில் கற்பூரம் ஏற்றி, பூஜை செய்து விட்டு சென்றனர்.

ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோவிலின் கதவுகளும் மூடப்பட்டிருந்தன.

கோவில்கள் மற்றும் தேவாலயங்களின் உள்ளே சடங்குகள் / பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் / மத சேவைகள் தொடர அனுமதிக்கப்படுகிறது, ஆனால் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.